lunar eclipse 2022: கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது ?
2022ஆம் ஆண்டின் முழு சந்திர கிரகணம் நாளை (நவ. 8) நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் கால அட்டவணை, கிரகணம் நிகழும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது என்பதை பற்றிய முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
2022ஆம் ஆண்டின் முழு சந்திர கிரகணம் நாளை (நவ. 8) நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் கால அட்டவணை, கிரகணம் நிகழும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது என்பதை பற்றிய முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
வானில் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரகணங்கள் எனப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
கிரகணத்தின் போது, நிலவு ஒரு ரத்த சிவப்பாக இருக்கும். எனவே, இது 'பிளட் மூன்' (blood moon) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தாண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் நாளை (நவ. 8 ) நிகழவுள்ளது.
இது தொடர்பாக அறிவியல் பலகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவின் கிழக்கு பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்
கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது ?
வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது, இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது. அதேபோல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது, இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாக காணப்படுகிறது. இவ்வாறு அறிவியல் பலகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்