மகரத்தில் உண்டான இரண்டு சுப யோகங்கள் - பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் ராசிகள்!-lucky signs with two auspicious yogas in capricorn - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மகரத்தில் உண்டான இரண்டு சுப யோகங்கள் - பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

மகரத்தில் உண்டான இரண்டு சுப யோகங்கள் - பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Feb 19, 2024 02:57 PM IST

மகர ராசியில் உண்டாகும் இரண்டு யோகங்களால் உண்டாகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மகர ராசியில் உண்டாகும் இரண்டு ராஜயோகங்கள்
மகர ராசியில் உண்டாகும் இரண்டு ராஜயோகங்கள்

வரும் பிப்ரவரி 20ஆம் தேதி, புதன், சனி பகவானின் இன்னொரு ராசியான கும்பத்திற்குச் செல்கிறார். ஆகையால் அங்கு சச என்னும் அதிர்ஷ்ட யோகம் உண்டாகிறது. மேலும், அந்த ராசியில் சூரியனும் சஞ்சரித்து வருவதால் புதனின் பெயர்வுக்குப் பின் சூரியன் மற்றும் புதனின்சேர்க்கையால் புதாத்திய ராஜயோகம் உண்டாகிறது.

இந்த 2 யோகங்களின் தாக்கத்தால், மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைப்பது உறுதி. இப்போது அந்த அதிர்ஷ்டக்கார ராசியினர் யார் என்பதை அறிந்துகொள்வோம்.

மேஷம்: இந்த ராசியின், 11ஆம் இல்லத்தில் சச மற்றும் புதாத்திய ராஜயோகமும் உண்டாகிறது. ஆகையால், இந்த ராசியினருக்கு வருவாய் அதிகரிக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே மகிழ்ச்சி கூடும். இக்காலகட்டத்தில் முன்னரே செய்த முதலீடுகளால் ஆதாயம்பெறுவீர்கள்.

கடகம்: இந்த ராசியின், 8ஆம் இல்லத்தில் சச மற்றும் புதாத்திய ராஜயோகத்தால், நீங்கள் பணிபுரியும் இடங்களில் நற்பெயர் உண்டாகும். தொழிலில் வளர்ச்சி கிடைக்கும். பார்ட்னர்களால் லாபம் உண்டாகும். புது பணியில் இணைந்தால் நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள். ஆய்வுத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சிம்மம்: இந்த ராசியின் 7ஆம் இல்லத்தில் இந்த இரண்டு யோகங்கள் உண்டாகின்றன. கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் விலகும். சனி பகவானின் அருளாசியால், பணியில் வெற்றியைப் பெறுவீர்கள். பார்ட்னர்கள் வைத்து தொழில் செய்பவர்கள், நல்ல லாபத்தினைப் பெறுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்