Thai New Moon: தை அமாவாசையில் ஆறு ராசிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்!
தை அமாவாசையில் நன்மை பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு, பிப்ரவரி 9ஆம் தேதி தை அமாவாசை தினம் ஆகும். இக்காலகட்டத்தில் பல்வேறு துறையினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கிறது. குறிப்பாக ஆறு ராசியினருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி வர இருக்கிறது. அப்படி தை அமாவாசையில் நல்ல விஷயத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம்: தை அமாவாசையின்போது உண்டாகும் கிரக நிலை மாற்றத்தால் மேஷ ராசியினருக்கு நீண்டநாட்களாக முயற்சித்த பணிகள் கைக்கு வந்துசேரும். இதனால் புதிதாக நிதி ஆதாயம் கிடைக்கலாம். அரசு திட்டங்கள் மூலம் பயன்பெறுவீர்கள். உங்கள் உயர் அலுவலர்களுக்கும் உங்களுக்கும் இணக்கமான சூழல் உண்டாகும். ஆகையால் பதவி உயர்வு கிடைக்கலாம்.
ரிஷபம்: தொழில் முனைவோருக்கு தை அமாவாசையில் நினைத்ததற்கு மேல் லாபம் கிடைக்கலாம். கடவுள் மீது நம்பிக்கை பெருகும். சிவதொண்டு செய்வீர்கள். பணியிடத்தில் கிடைக்கும் வாய்ப்புகளால் அயல்நாடு செல்லும் யோகம் வாய்க்கும்.
கடகம்: இந்த ராசியினருக்கு, தை அமாவாசையில் நடக்கும் கிரக மாற்றத்தால் நீண்டநாட்களாக திருமணம் கைகூடாத கடக ராசியினருக்குத் திருமணம் கைகூடும். இந்த நாளில் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். புதிய தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். பார்ட்னர்ஷிப் போட்டு தொழில் செய்தாலும் வளர்ச்சி கிடைக்கும். இல்லறத்துணையைப் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வர்.
விருச்சிகம்: இந்த ராசியினருக்கு தை அமாவாசை நாள் மன நிம்மதியைத் தரும் பயணத்தைத் தரலாம். விட்டுக்கொடுத்துப் போவீர்கள். விட்டுக்கொடுத்துப்போவதால் பல சாதகமான சூழ்நிலைகளைப் பெறுவீர்கள்.
மகரம்: இந்த ராசியினருக்குப் பணியிடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஊக்கத்தொகையைப் பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தை அமாவாசையில் ஒரு விஷயத்தைத் தொடங்கினால் தடை படாது. துணிந்து தொடங்குங்கள். வாகனங்களை உபயோகிக்கும்போது எச்சரிக்கை தேவை.
மீனம்: இந்த ராசியினருக்கு தை அமாவாசையில் சுபமான செய்தி வந்துசேரும். தொழில் செய்பவர்களுக்கு நிகர லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் இத்தனை நாட்கள் கிடைக்காத நல்ல பெயரை, தை அமாவாசையில் சம்பாதிப்பீர்கள். வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். உங்களிடம் முகம் தெரியாதவர்கள் கூட நட்புப் பாராட்ட விரும்புவார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்