Sani Game: சனி இந்த ராசிகளில் விளையாடுகிறார்.. இன்னும் 2 மாதம்தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Game: சனி இந்த ராசிகளில் விளையாடுகிறார்.. இன்னும் 2 மாதம்தான்

Sani Game: சனி இந்த ராசிகளில் விளையாடுகிறார்.. இன்னும் 2 மாதம்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 27, 2023 01:55 PM IST

Saturn Transit: சனிபகவான் இந்த ராசிகளுக்கு இரண்டு மாதத்தில் அதிர்ஷ்டத்தை தர போகின்றார்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று வக்ர பயணத்தை மேற்கொண்டார். வரும் நவம்பர் நான்காம் தேதி வரை இதே நிலையிலேயே பயணம் செய்வார்.

இதன் காரணமாக இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாக்கியசாலியாக மாறப்போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

தற்போது சிக்கல்களை சந்தித்து வரும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்திற்கு பிறகு நல்ல நிலைமையை பெறப்போகின்றனர். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன்கள் கைகூடும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் அதிர்ஷ்டம் நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சனி பகவான் நல்ல முன்னேற்றத்தை தர போகின்றார். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்புள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கன்னி ராசி

 

சனிபகவான் உங்களது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை தர போகின்றார். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அனைத்தும் உங்களைத் தேடி வர அதிக வாய்ப்புள்ளது. பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்