தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருபகவான் நட்சத்திர இடம் மாற்றும்.. பணம் வழியில் நனையும் ராசிகள் இவர்கள்தான்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!

குருபகவான் நட்சத்திர இடம் மாற்றும்.. பணம் வழியில் நனையும் ராசிகள் இவர்கள்தான்.. நீங்க என்ன ராசி சொல்லுங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 15, 2024 06:00 PM IST

Guru Bhagwan: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குரு பகவான்
குரு பகவான்

தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.  இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருடைய ராசிமாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் சூரிய பகவானின் நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை அதிர்ஷ்டத்தோடு கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவானின் பலன்கள் முழுமையாக கிடைக்கப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய மாற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய பாதை உங்களுக்கு அமையும். பல்வேறு விதமான சிக்கல்கள் குறையும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் குரு பகவானின் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசியல் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கொண்டிருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு வருமான முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவான் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியல் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலத்தில் வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel