Guru 2024: குரு பகவான் 2024-ல் அதிர்ஷ்டத்தை கொட்டும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru 2024: குரு பகவான் 2024-ல் அதிர்ஷ்டத்தை கொட்டும் ராசிகள்

Guru 2024: குரு பகவான் 2024-ல் அதிர்ஷ்டத்தை கொட்டும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 22, 2023 09:33 AM IST

2024 ஆம் ஆண்டு குருபகவான் நன்மைகளை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் வக்ர பயணத்தை மேற்கொண்டு வருகிறார் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

குருபகவான் வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக வரக்கூடிய புத்தாண்டு அஷ்டலட்சுமி யோகம் சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குரு பகவான் வரும் ஜனவரி மாதம் முதல் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்ட யோகம் உங்களை தேடி வரும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

குரு பகவான் ஜனவரி மாதம் முதல் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை தரப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் நல்ல முயற்சிகள் வெற்றியை பெற்று தரும்.

துலாம் ராசி

 

குரு பகவான் உங்களுக்கு கஜலட்சுமி யோகத்தை கொடுக்கப் போகின்றார். உங்கள் மீது நேரடியான பார்வை விழுகின்ற காரணத்தினால் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் குறையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். மனம் திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை பெற்று தரும். நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும். கடவுள் வழிபாடு மிகவும் முக்கியமாகும்.

தனுசு ராசி

 

குரு பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகின்றது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்