தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Saturn And Surya Are Going To Give Luck Together

Sani Suriyan: சனியோடு கூட்டணி சேர்ந்த சூரியன்.. 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உச்சம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2024 11:48 AM IST

Sun transit: சனியும் சூரியனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.

சூரிய பகவான், சனிபகவான்
சூரிய பகவான், சனிபகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் நுழைந்தார். சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழையும் திருநாளில் தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி தினம் என்றும் கொண்டாடப்படுகிறது.

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

தற்போது மகர ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவான் பிப்ரவரி மாத தொடக்கத்தில் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனிபகவானும், சூரிய பகவானும் ஒன்று சேரப் போகின்றனர். இவர்கள் இருவருடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

சனி மற்றும் சூரியனின் சேர்க்கை உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ்கின்றது. உங்களுக்கு பணவரவில் எந்த குறையும். இருக்காது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

தனுசு ராசி

 

சூரியன் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டை பார்க்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களில் விடுதலை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ஆளுமை திறந்தால் ஆதரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வருமானம் அதிகரிக்க கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.