தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூறாவளி சூறையாட்டம் ஆடும் புதன்.. பணப் பொட்டலங்களை வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு வந்துவிட்டது

சூறாவளி சூறையாட்டம் ஆடும் புதன்.. பணப் பொட்டலங்களை வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 02:04 PM IST

Lord Mercury: ஜூன் 29ஆம் தேதி அன்று அதாவது இன்று சந்திர பகவானின் கடக ராசிக்குள் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை இதே கடக ராசியில் புதன் பகவான் பயணம் செய்வார்.

சூறாவளி சூறையாட்டம் ஆடும் புதன்.. பணப் பொட்டலங்களை வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு வந்துவிட்டது
சூறாவளி சூறையாட்டம் ஆடும் புதன்.. பணப் பொட்டலங்களை வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு வந்துவிட்டது

கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று புதன் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். ஜூன் 29ஆம் தேதி அன்று அதாவது இன்று சந்திர பகவானின் கடக ராசிக்குள் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை இதே கடக ராசியில் புதன் பகவான் பயணம் செய்வார். இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதன் பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுப்பார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9