Guru Travel: குரு சதி வேலைக்காரன்.. காட்டுத்தீ போல் பணம் பரவும் ராசிகள்.. இனி ஓயாது.. தொட முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Travel: குரு சதி வேலைக்காரன்.. காட்டுத்தீ போல் பணம் பரவும் ராசிகள்.. இனி ஓயாது.. தொட முடியாது

Guru Travel: குரு சதி வேலைக்காரன்.. காட்டுத்தீ போல் பணம் பரவும் ராசிகள்.. இனி ஓயாது.. தொட முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 09, 2024 09:39 AM IST

Guru Travel: குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Travel: குரு சதி வேலைக்காரன்.. காட்டுத்தீ போல் பணம் பரவும் ராசிகள்.. இனி ஓயாது.. தொட முடியாது
Guru Travel: குரு சதி வேலைக்காரன்.. காட்டுத்தீ போல் பணம் பரவும் ராசிகள்.. இனி ஓயாது.. தொட முடியாது

குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றம் செய்யக் கூடியவர். குருபகவான் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் குருபகவான் பயணம் செய்வார். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தேடி தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிதாக வருமானத்தின் ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் உயர்வு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும.

கடக ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு கடுமையான போட்டி இருந்தாலும் முன்னேற்றம் இருக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றப் போகின்றது. புதிய நண்பர்களின் உறவுகள் உங்களுக்கு கிடைக்கும். பழைய நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நன்மைகள் வழக்கத்தைவிட முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சில சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner