அதிரடி காரன் வந்துவிட்டார்.. 2025-ல் வாழ்க்கையை மாற்றம் சுக்கிரன்.. 3 ராசிகள் ஓஹோ தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிரடி காரன் வந்துவிட்டார்.. 2025-ல் வாழ்க்கையை மாற்றம் சுக்கிரன்.. 3 ராசிகள் ஓஹோ தான்!

அதிரடி காரன் வந்துவிட்டார்.. 2025-ல் வாழ்க்கையை மாற்றம் சுக்கிரன்.. 3 ராசிகள் ஓஹோ தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 20, 2024 01:44 PM IST

Lord Venus: சுக்கிரனின் அவிட்டம் நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

அதிரடி காரன் வந்துவிட்டார்.. 2025-ல் வாழ்க்கையை மாற்றம் சுக்கிரன்.. 3 ராசிகள் ஓஹோ தான்!
அதிரடி காரன் வந்துவிட்டார்.. 2025-ல் வாழ்க்கையை மாற்றம் சுக்கிரன்.. 3 ராசிகள் ஓஹோ தான்!

சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் தற்போது சுக்கிர பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி அன்று அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். சுக்கிரனின் அவிட்டம் நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பல நன்மைகளை கொடுக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். 

புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றி கொடுக்கப் போகின்றது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பல்வேறு விதமான யோகங்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

Whats_app_banner