Guru Peyarchi: குரு பண மூட்டையோடு வருகிறார்.. 3 ராசிகள் உச்சம்
Guru Peyarchi: குருபகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். ராஜ குருவாக விளங்கக்கூடிய குரு பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்றார். 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் ரிஷப ராசியில் பிரவேசம் செய்ய உள்ளார்.
இந்த ஆண்டில் குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தை தொட போகின்றனர். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குருபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இந்த பதிவில் காண்போம்
மேஷ ராசி
குருபகவான் உங்களுக்கு சாதகமாக செயல்படுகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு மே மாதத்தில் இருந்து நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். அனைத்து விதமான வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும்.
மிதுன ராசி
குருபகவான் உங்களுக்கு சிறப்பான மாற்றத்தை கொடுக்கப் போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயங்கள் உண்டாகும்.
சிம்ம ராசி
குருபகவான் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட வந்த நஷ்டங்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும் நினைத்த காரியம் நிறைவேறும் திட்டங்கள் வெற்றியடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் வலுவாக அமையும் வருமானத்தில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9