Guru Palan: குரு கொட்டுவது உங்களுக்குத்தான்.. யோகம் பெறுகின்ற ராசிகள்
குரு பகவானால் ராஜ யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.
குருபகவான் நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்கள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார்.
தற்போது நேரான பயணத்தில் இருக்கக்கூடிய குரு பகவான், மே 1ம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறும் குரு பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். அதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். அதிரசத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். அலட்சியப் போக்கு இருந்தால் சிக்கல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
ரிஷப ராசி
குரு பகவான் உங்கள் ராசியில் 12-வது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஒன்றாக அதிக வாய்ப்பு உள்ளது. பண சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனமாக அதிக வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
குருபகவான் உங்கள் ராசியில் நேரான பயணத்தை ஒன்பதாவது வீட்டில் தொடங்கியுள்ளார். அதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பல்வேறு விதமான போராட்டங்கள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சுப காரியங்கள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மன தைரியம் அதிகரிப்பதால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்க வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9