தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Get The Fortune Of Venus

Sukra 2024: சுக்கிரனின் யோகம் தொடங்கிவிட்டது.. அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 03, 2024 01:06 PM IST

சுக்கிரனின் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார் இது செவ்வாய் பகவானின் சுந்தர் ஆசியா வரும் டிசம்பர் 18ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்

சுக்கிர பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ஒரு ராசிகள் ஆடம்பர வசதிகளை பெற போகின்றனர். அது எந்த தராசுகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த ஆண்டு தொடக்கமே உங்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

கடக ராசி

 

 

சுக்கிரன் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.

மேஷ ராசி

 

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை கொடுக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அவ்வப்போது இடையூறுகள் வந்தாலும் புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் குறை இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்