Lord Sani: சனி வேலையை தொடங்கி விட்டார்.. சிக்கலை சந்திக்கும் ராசிகள்-let us see the zodiac signs that will face problems due to lord sani declination - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி வேலையை தொடங்கி விட்டார்.. சிக்கலை சந்திக்கும் ராசிகள்

Lord Sani: சனி வேலையை தொடங்கி விட்டார்.. சிக்கலை சந்திக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 09:42 AM IST

Lord Sani: சனி பகவான் அஸ்தமனத்தால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ராசி மாற்றம் மட்டுமல்லாது பல்வேறு விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவருடைய ராசிகள் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு உச்சயோகங்கள் கிடைக்கும். மோசமான நிலையில் சனி பகவான் இருந்தால் மிகவும் மோசமான பலன்கள் கிடைக்கும்.

தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ராசியில் வரும் 2025 வரை பயணம் செய்ய உள்ளார். கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி என்று சனி பகவான் அஸ்தமனமானார். இவருடைய அஸ்தமனத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் சனிபகவான் மூன்றாவது வீட்டில் அஸ்தமனமானார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வசதிகள் குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கையில் சிக்கல்கள் ஏற்படும் பல்வேறு விதமான தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயர் அலுவலர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் உங்கள் குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக பல்வேறு விதமான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி அஸ்தமனம் ஆகின்றார். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி கடின உழைப்பு கொடுக்க வேண்டும். வியாபாரத்தில் பெரிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனம் தளராமல் முயற்சி செய்தால் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தன்னம்பிக்கை குறைய கூடிய சூழ்நிலை உண்டாகும். மொத்தத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner