தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Experience Mars Yoga

Mars Yoga: செவ்வாய் அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 08, 2024 04:22 PM IST

செவ்வாய் யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் மகர ராசிகள் தற்போது பயணம் செய்து வருகின்றார். இது சனிபகவானின் ராசியாகும் வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். இதுவும் சனி பகவான் ராசியாகவும் ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது கும்ப ராசிகள் நுழைந்து செவ்வாய் பகவான் சனி பகவானுடன் சேர்கின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் வருகின்றார். அதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் சனி பகவான் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவான் நினைக்கின்றார். இதனால் உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் நம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை திறன் முன்னேற்றம் அடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் 11வது வீட்டில் செவ்வாய் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நீண்டகாலமாக சிக்கி கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் யோகம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel