தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Get Yoga Due To The Declination Of Lord Mercury

Lord Mercury: புதன் புரட்டிப் பார்க்கிறார்.. பணமழை உறுதி.. அதிர்ஷ்டம் வருகிறது.. யோகத்தில் நனைய போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2024 11:48 AM IST

Lord Mercury: புதன் பகவான் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு புதன் பகவான் வெற்றிகளை அள்ளிக் கொடுக்க போகின்றார்.

புதன் பகவான்
புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களும் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் புதன் பகவான் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு புதன் பகவான் வெற்றிகளை அள்ளிக் கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. இதுவரை தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

தனுசு ராசி

 

புதனின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். புதன் பகவான் உங்களுக்கு செயல் திறனை அதிகப்படுத்தி கொடுப்பார். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கும்ப ராசி

 

புதன் பகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel