குரு வாகனத்தில் ஏறிய செவ்வாய்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு வாகனத்தில் ஏறிய செவ்வாய்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா?

குரு வாகனத்தில் ஏறிய செவ்வாய்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 26, 2024 04:49 PM IST

Guru Mars: குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அதற்குப் பிறகு ஒரு ஆண்டு காலம் இந்த ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

குரு வாகனத்தில் ஏறிய செவ்வாய்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா?
குரு வாகனத்தில் ஏறிய செவ்வாய்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.

குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அதற்குப் பிறகு ஒரு ஆண்டு காலம் இந்த ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிக்கிடந்த பணம் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல யோகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மங்கள யோகம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் பொதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner