Lord Mars: அதிர்ஷ்டம் தரும் செவ்வாய்.. ராஜ ராசிகள் இவர்கள்தான்
செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார் இந்த ஆண்டின் முதல் முறையாக செவ்வாய் பகவான் உதயமாகியுள்ளார். இவருடைய செயல்பாடுகளால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. அனைத்து காரியங்களும் அணுகூலமாக நடக்கும். வெளிநாடு வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். விரும்பிய வேலைகள் கிடைக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காரிய தடைகள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுன ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பார். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
கடக ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றார். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் வேலை செய்யும் இடத்தில் உருவாகும். புதிய வாய்ப்புக்கான தருணங்கள் அமையும். தொழில் ரீதியாக சில நஷ்டங்கள் ஏற்பட்டாலும் முன்னேற்றத்திற்கு எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல நிலைமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9