Sevvai Palan: பண மழையோடு வரும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sevvai Palan: பண மழையோடு வரும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்

Sevvai Palan: பண மழையோடு வரும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 17, 2023 02:34 PM IST

செவ்வாய் விருச்சக ராசிக்குள் நுழைந்த காரணத்தால் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

நவகிரகங்களின் இடமாற்றம் ஒருவரின் ஜாதகத்தை முடிவு செய்யும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக எடுத்துக் கொள்ளும் காலங்களில் நன்மை மற்றும் தீமைகள் உண்டாகும்.

செவ்வாய் பகவான் நேற்று விருச்சக ராசிக்குள் நுழைந்தார். அதேசமயம் புதன் பகவான் இன்று விருச்சக ராசிக்குள் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக ராஜ யோகங்கள் உருவாகியுள்ளது. இந்த யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மகர ராசி

செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் உங்களுக்கு புதாதித்த யோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பால் தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவரோடு புதன் சேர்ந்த காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்க உள்ளது. கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி ராசி

 

புதன் மற்றும் செவ்வாயில் கூட்டணியின் காரணமாக உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

சிம்ம ராசி

 

இரண்டு கிரகங்கள் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் உருவாகியுள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் உங்களுக்கு முன்னேற்றமடைய போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்