தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs That Sun And Saturn Together Are Going To Give Rich Yoga

Sani Money Luck: சனியும் சூரியனும் சேர்ந்து விட்டனர்.. பணக்காரராக மாறப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 10:39 AM IST

சூரியனும் சனியும் சேர்ந்து பணக்கார யோகத்தை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.

சனி பகவான், சூரிய பகவான்
சனி பகவான், சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

அதேசமயம் கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் சனி பகவான் ராசியான நகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வரும் அதே வேளையில் சூரிய பகவானும் அவருடைய ஒன்றிணைந்து பயணம் செய்கிறார். இந்த நிகழ்வானது 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் நிகழ்ந்துள்ளது.

கும்ப ராசியில் சூரியன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ள காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சனி மற்றும் சூரிய பகவான் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரம் சிறப்பாக இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய நிலை உயர்வாக இருக்கும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் சனியும் சூரியனும் சேர்ந்து பல்வேறு விதமான நன்மைகளை செய்யப்போகின்றனர் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் மங்கள யோகம் உருவாகி உள்ளது. சனி மற்றும் சூரியன் இருவரும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். புதிதாக வீடு மற்றும் வாகனமாக அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel