தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Signs That Are Going To Enjoy Full Benefits From Lord Mars

சனி செவ்வாய் கூட்டணி.. கும்பத்தில் பணமழை.. யோகத்தில் நுழையும் ராசிகள்.. யோகம் கொட்ட போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2024 01:00 PM IST

Lord Mars: செவ்வாய் மற்றும் சனிபகவானின் சேர்கையானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் முழுமையான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி செவ்வாய்
சனி செவ்வாய்

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் நுழையப் போகின்றார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவரோடு தற்போது செவ்வாய் பகவான் இணைய போகின்றார். இந்த இரண்டு கிரகங்களும் இணைய போகின்றனர்.

செவ்வாய் மற்றும் சனிபகவானின் சேர்கையானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் முழுமையான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் உள்ளிட்டவைகளை அதிகப்படுத்தும். இருப்பினும் பொறுமையாக இருப்பது நல்லது. எந்த விஷயமாக இருந்தாலும் கட்டுப்பாடு இருப்பது நல்லது. மற்றபடி அனைத்து விதமான செயல்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சில சோதனைகள் ஏற்படும் பொழுது மிகவும் கவனமாக கையாள்வது நல்லது.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்த போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

உங்களுக்கு செவ்வாய் பகவான் நல்ல மாற்றங்களை கொடுப்பார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். அனுகூலமான பலன்கள் உங்களை தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

கடக ராசி

 

கும்பத்தில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உணர்வுகளை கட்டுப்படுத்துவது நல்லது. அதிகமாக பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பொறுமையாக இருந்தால் அனைத்து விதமான செல்வங்களையும் முழுமையாக அடையலாம்.

சிம்ம ராசி

 

உங்களுக்கு தன்னம்பிக்கையை செவ்வாய் பகவான் அதிகப்படுத்த போகிறார். தலைமைத்துவ திறன்கள் அதிகமாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டு தேர்வுகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். உங்களுக்கு தனி அந்தஸ்து கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel