Guru Pana Mazhai: குரு கூடி கும்மி அடிக்கப் போகிறார்.. குனிந்து பணத்தை அள்ளும் ராசிகள்.. உங்களை தொட முடியாது!-let us see the rasis who are going to enjoy a rich life due to guru bhagwan nakshatra transit - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Pana Mazhai: குரு கூடி கும்மி அடிக்கப் போகிறார்.. குனிந்து பணத்தை அள்ளும் ராசிகள்.. உங்களை தொட முடியாது!

Guru Pana Mazhai: குரு கூடி கும்மி அடிக்கப் போகிறார்.. குனிந்து பணத்தை அள்ளும் ராசிகள்.. உங்களை தொட முடியாது!

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 02, 2024 05:00 PM IST

Guru Bhagwan: குரு பகவானின் மிருகசீரிஷ நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மரியாதையான வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Pana Mazhai: குரு கூடி கும்மி அடிக்கப் போகிறார்.. குனிந்து பணத்தை அள்ளும் ராசிகள்.. உங்களை தொட முடியாது!
Guru Pana Mazhai: குரு கூடி கும்மி அடிக்கப் போகிறார்.. குனிந்து பணத்தை அள்ளும் ராசிகள்.. உங்களை தொட முடியாது!

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் குரு பகவான் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார். குரு பகவானின் மிருகசீரிஷ நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மரியாதையான வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். 

சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சுமூகமான சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிய ஆதாரங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அருமையான வாய்ப்புகள் தேடி வரும். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால் உங்களுக்கு ஆதரவு அதிகமாக கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner