தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rashis That Get Raja Yoga By Lord Sani Bhagavan

சனி அஸ்தமனமானார்.. இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2024 12:47 PM IST

Sani Bhagavan: சனி பகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். இந்நிலையில் நவகிரகங்களில் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். இந்த காலகட்டத்தில் அனைத்து விதமான ராசிகளுக்கும் கட்டாயம் சனி பகவானின் தாக்கம் இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமிக்கின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரியன் அஸ்தமிக்கின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய திட்டங்கள் முன்னேற்றம் அடையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரிய பகவான் அஸ்தமிக்கின்றார். இதனால் உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel