செவ்வாய் பண மழையில் சிக்கிய ராசிகள்.. செல்வத்தில் மூச்சுமுட்ட போகும் ராசிகள்.. வருகிறது ராஜயோகம்-let us see about the zodiac signs that will be blessed by lord mars - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  செவ்வாய் பண மழையில் சிக்கிய ராசிகள்.. செல்வத்தில் மூச்சுமுட்ட போகும் ராசிகள்.. வருகிறது ராஜயோகம்

செவ்வாய் பண மழையில் சிக்கிய ராசிகள்.. செல்வத்தில் மூச்சுமுட்ட போகும் ராசிகள்.. வருகிறது ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2024 04:41 PM IST

Lord Mars: சனி மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி மற்றும் செவ்வாய்
சனி மற்றும் செவ்வாய்

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்தார்.

ஏற்கனவே கும்ப ராசியிள் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அது அவருடைய சொந்தமான ராசியாகும். தற்போது சனி மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும். உங்களுடைய ராசியில் கர்ம வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உங்களுடைய வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பொறுமையாக இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்களுடைய ராசியில் நான்காம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவில் இருந்த பொழுதிலும் இருக்காது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.

தனுசு ராசி

 

உங்களுக்கு சாதகமான பலன்களை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வத்தின் பெருக்கம் நிலையாக இருக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அதிகம் உருவாகும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பணம் சேமிப்பதில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner