சூரிய பெயர்ச்சி.. சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்
Sun Transit: சூரிய பெயர்ச்சியால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் வழங்கி வருகிறார். நவகிரகங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடிய சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 19, 2025 07:00 AMகுபேர ராசிகள்: 4 ராஜ யோகங்கள்.. 3 குபேரன் ராசிகள்.. அக்ஷய திருதியை நாளில் லட்சுமி தேவி பண மழை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 19 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 17, 2025 05:29 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பண மழை கொடுத்து தூக்க வரும் ராகு.. கோடிகளில் நனையும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா சொல்லுங்க?
அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.
சூரிய பகவான் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சனி பகவான் பயணம் செய்து வரும் மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசியில் இணையப் போகின்றார். சூரிய பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல சனி மற்றும் சூரியன் இருவரும் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் சூரிய பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை இங்கே காண்போம்.
கடக ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டிற்கு செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது.
பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு உண்டாக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு உண்டாகும். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர உள்ளார். இவர் உங்களுடைய அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உடன் வேலை செய்யும் ஊழியர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அவ்வப்போது நம்பிக்கை அதிகரிக்கும்.
பல்வேறு விதமான திட்டங்களை தற்போது தள்ளி வைப்பது நல்லது. தேவையற்ற செலவுகளால் சிரமப்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
விருச்சிக ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் கவனத்தை திசை திருப்பி சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை தராது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. ஆனால் சேமிப்பை நீங்கள் அதிக படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
