Guru Peyarchi: குருபகவான் அடுத்த ஆண்டு குறிவைத்த 4 ராசிகள்
Guru Peyarchi: குரு பகவானால் 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து காண்போம்.
நவகிரகங்களில் குரு பகவான் மங்கள கிரகமாக விளங்க கூடியவர். ஒரு ராசியில் இவர் ஆட்சி பெற்ற அமர்ந்தால் அவர்களுக்கு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவை அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குருபகவான் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
குரு பகவான் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தை கொடுப்பார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்ம ராசி
வாய்ப்புகள் உங்களை தேடி வரும் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவில் சிக்கல்கள் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.
தனுசு ராசி
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை அமையும் எனக் கூறப்படுகிறது.
மகர ராசி
குரு பகவானால் உங்களுக்கு சுபயோகம் உருவாகி உள்ளது. பணவரவில் எந்த குறையும். இருக்காது மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும் செலவு குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்