’மேஷம் முதல் மீனம் வரை!’ சாதூர்யம்! அதிகாரம்! செல்வம் தரும் கூர்ம யோகம் யாருக்கு?
ஒரு ஜாதகத்தில் எந்த லக்னத்தில் ஒருவர் பிறந்து இருந்தாலும் 5, 6, 7 ஆகிய வீடுகளில் தொடர்ச்சியாக ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தால் கூர்ம யோகம் உண்டாகும்.
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் முக்கியத்துவம் பெற்ற உப யோகமாக ’கூர்ம யோகம்’ விளங்குகின்றது.
கூர்ம யோகம் உருவாவது எப்படி?
ஒரு ஜாதகத்தில் எந்த லக்னத்தில் ஒருவர் பிறந்து இருந்தாலும் 5, 6, 7 ஆகிய வீடுகளில் தொடர்ச்சியாக ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தால் கூர்ம யோகம் உண்டாகும். சில நிலைகளில் இரண்டு வீடுகளில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்து, ஒரு வீட்டில் அதி நட்பு பெற்ற கிரகங்கள் அமர்ந்தாலும் இந்த யோகம் ஆனது 75 சதவீதம் வரை வேலை செய்யும். ஏதேனும் ஒரு வீட்டில் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்து மற்ற இரண்டு வீடுகளில் அதிநட்பு பெற்ற கிரகங்கள் அமர்ந்தாலும் இந்த யோகம் வேலை செய்யும்.
இந்த அமைப்பில் ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருக்க கூடாது. சப்த கிரகங்கள் என்று அழைக்கப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
உதாணமாக ஒரு மிதுனம் லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இதில் 5ஆம் இடத்தில் சனி அல்லது சுக்கிரன் அமர வேண்டும். 6ஆம் இடத்தில் செவ்வாயும், 7ஆம் இடத்தில் குரு பகவானும் இருக்க வேண்டும். இதில் சூரியன், செவ்வாய் ஆகியோர் அதிநட்பு பெற்ற நிலையில் இருப்பார்கள். இந்த அமைப்பு கூர்ம யோகத்தை உண்டாக்கும். கும்ப லக்ன ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் புதன் ஆட்சி, 6ஆம் இடத்தில் குரு அல்லது சந்திரன், 7ஆம் இடத்தில் அதிநட்பு பெற்ற செவ்வாய் இருந்தாலும் கூர்ம யோகம் 75 சதவீத நற்பலன்களை கொடுக்கும்.
கூர்ம யோகத்தின் பலன்கள்:-
தைரியம், திடகாத்திரம், முயற்சியில் வெற்றி, எதற்கும் அஞ்சாமை, துணிவுடன் முன்னேறுவது, நீண்ட ஆயுள், சாதூர்யம் ஆகிய நன்மைகளை கூர்ம யோகம் கொடுக்கும். பூமியை தாங்கி பிடித்த மகாவிஷ்ணுவின் அவதாரமான கூர்ம அவதாரத்தை போல் இவர்கள் தன்னை சார்ந்த உறவுகளையும், நண்பர்களையும் தாங்கி பிடிப்பார்கள். அறிவுக் கூர்மையாலும், புத்திசாலித்தனத்தாலும் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றிகளை பெறுவீர்கள். வாழ்வில் முன்னேற்றங்களை பிறருக்கு உண்டாக்கி மகிழ்வது இவர்களின் இயல்பாக இருக்கும். வீரதீர் செயல்கள் மீது இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். கண்டிப்புடன் மற்றவர்களை வழிநடத்தி செல்லும் திறன் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.