தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Vakra Peyarchi: வழி விடும் ஜென்ம சனி.. வக்ர கதியில் பயணம்..ராஜ யோகம் அடிக்கும் ராசி யார்?

Sani vakra Peyarchi: வழி விடும் ஜென்ம சனி.. வக்ர கதியில் பயணம்..ராஜ யோகம் அடிக்கும் ராசி யார்?

Kalyani Pandiyan S HT Tamil
Jul 03, 2024 04:23 PM IST

Sani vakra Peyarchi: சனி சிம்ம ராசியை பார்க்கிறார். இப்போது, பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு வீட்டில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வேண்டுமென்றே துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். - சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்!

Sani vakra Peyarchi: வழி விடும் ஜென்ம சனி.. வக்ர கதியில் பயணம்..ராஜ யோகம் அடிக்கும் ராசி யார்?
Sani vakra Peyarchi: வழி விடும் ஜென்ம சனி.. வக்ர கதியில் பயணம்..ராஜ யோகம் அடிக்கும் ராசி யார்?

சிம்ம ராசிக்கு உரிய சனி வக்ர பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் சுபாஷ் பால கிருஷ்ணன் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது,  "வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும், அதை தைரியமாக சமாளித்து, விஸ்வரூபம் எடுக்கும் குணம் படைத்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்களுக்கு சனி இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களை தரப்பொகிறார்.

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: 

சனிபகவான் கடந்த ஜூன் 12 முதல் வருகிற நவம்பர் 4 வரையில் வக்ர கதி அடைந்து, கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் சமசப்தமாக வக்ரகதியில், சிம்ம ராசியை பார்க்கிறார். இப்போது, பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு வீட்டில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வேண்டுமென்றே துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும்  பிரச்சினையை எதிர்கொண்டு, ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

சம சப்தமாக இருக்கக்கூடிய சனிபகவான் தற்போது வக்ரகதியாக மாறுவதன் மூலம், ராஜ யோகம் கிடைப்பது என்பது உறுதியாகும். 

குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு கோல்டன் ஜாக்பாட் யோகம்  கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், அவர்கள் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுப்பார்கள். 

விஸ்வரூபம் எடுக்கும் சனி பகவான்

அதேபோல மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள், மிகப்பெரிய சாதனைகளை படைத்து, புகழின் உச்சத்திற்கு செல்வார்கள். விளையாட்டுத்துறையில் இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்கள் விளையாட்டில் தேர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்.