Kulatheivam: வருஷத்துக்கு ஒருமுறையாவது குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kulatheivam: வருஷத்துக்கு ஒருமுறையாவது குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்?

Kulatheivam: வருஷத்துக்கு ஒருமுறையாவது குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்?

Manigandan K T HT Tamil
Nov 28, 2023 04:57 PM IST

குலதெய்வம் என்பது நம் குலத்துடன் சம்பந்தப்பட்டது ஆகும்.

கோயில்
கோயில்

எந்தவொரு செயலை தொடங்குவதற்கு முன்னாலும் உங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குலதெய்வம் என்பது உங்கள் குடும்ப தெய்வம்.

முருகன், விநாயகர், மகாலட்சுமி என பல தெய்வங்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் இஷ்ட தெய்வங்கள் ஆகும்.

குலதெய்வம் என்பது நம் குலத்துடன் சம்பந்தப்பட்டது ஆகும். ஒவ்வொருவரும் மரணித்த பிறகு பித்ரு லோகத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.

அங்கு புண்ணியம் செய்த ஆத்மாக்கள், பாவம் செய்த ஆத்மாக்கள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, பாவம் செய்த ஆத்மாக்கள் நரக லோகத்திற்கு அனுப்பப்படுகிறது.

புண்ணியம் செய்த ஆத்மாக்கள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுகிறது.

7 ஜென்மத்துக்கு உன்னையே குல தெய்வமாக நினைத்து வழிபடுகிறேன் என ஒருவர் நினைத்துவிட்டார் என வைத்துக் கொள்வோம்.

வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

குலதெய்வத்தை தரிசனம் செய்து சிறப்பாக வாழுங்கள்.

குலதெய்வம் இந்து மற்றும் ஜைன மதத்தில் மூதாதையர் வழிபாட்டு தெய்வமாகும். குல தெய்வம் பெரும்பாலும் ஒன்று அல்லது பல குடும்பங்கள், குலம், வம்சம், கோத்திரம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது இஷ்ட தெய்வம், மற்றும் கிராம காவல் தெய்வம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லையென்றால் எத்தனை கோயிலுக்கு சென்றுவந்தாலும் பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை. குலதெய்வம் கோயிலுக்கு் செல்வதற்காக வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சொந்த நாட்டுக்கு வருகை தருபவர்களும் இங்கே இருக்கின்றனர்.

குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்கு திட்டமிட்டதும் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்குவோம்.

அதுமட்டுமல்லாமல் வீட்டிலிருந்து சில பொருட்களை நீங்கள் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பொருட்களை நீங்கள் எடுத்து வருவீர்கள் என குலதெய்வமும் காத்துக் கொண்டிருக்குமாம்.

மனநிறைவோடும் புன்னகையோடும் குலதெய்வம் உங்களை வரவேற்க என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என பார்ப்போம்.

தங்கள் கையால் சமைத்த சாப்பாட்டை கட்டுச்சோறாக எடுத்துச் செல்வார்கள். அதற்குக் காரணம் அப்போதெல்லாம் ஹோட்டல் வசதி கிடையாது என்பதாகக் கூட இருக்கலாம். அப்படி எடுத்துச் செல்லும் உணவை குலதெய்வத்துக்கும் படைப்பார்கள்.

அவ்வாறு போடப்படும் படையலை குலதெய்வம் வேறு ஜீவராசிகள் வடிவில் வந்து சாப்பிடும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படி எடுத்துச் செல்லப்பட்ட சாப்பாட்டை ஏழைக்குக் கூட தானமாகக் கொடுக்கலாம்.

குலதெய்வத்துக்கு மாவிளக்கு ஏற்றுவது நல்லது. இதை வீட்டிலேயே செய்து எடுத்துச் செல்வது அவசியம். ஒவ்வொரு மாதம் பவுர்ணமி அல்லது வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வக் கோயிலுக்கு செல்ல நீங்கள் திட்டமிடும்போது இதையும் கட்டாயம் எடுத்துச் செல்லுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்