’நாளை கார்த்திகை முதல் நாள்!’ மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கான கார்த்திகை மாத பலன்கள்!
நவம்பர் 16ஆம் தேதியான நாளைய தினம் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதன் அடிப்படையிலேயே கார்த்திகை மாத பிறப்பு நடைபெறுகின்றது.
ஜோதிட விதிகளின் படி சூரிய பகவான் மாதம் தோறும் பெயர்ச்சி ஆகும் கிரகம் ஆகும். கிரகங்களின் ராஜாவான சூரிய பகவானின் பெயர்ச்சியை பொறுத்தே மாதங்கள் கணக்கிடப்படுகின்றன.
நவம்பர் 16ஆம் தேதியான நாளைய தினம் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதன் அடிப்படையிலேயே கார்த்திகை மாத பிறப்பு நடைபெறுகின்றது.
தற்போது துலாம் ராசியில் சூரிய பகவான் நீசம் பெற்று உள்ள நிலையில் விருச்சிகம் ராசிக்குள் நுழைவது சில ராசிகளுக்கு மங்களகரமானதாகவும், சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும்.
மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கான கார்த்திகை மாத பலன்கள்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் தன்னம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். ஆனால் மனம் அமைதியற்றதாக இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். பணியில் உள்ள அதிகாரிகளுடன் இணக்கத்தை பராமரிக்கவும். வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனம் அமைதியற்று இருக்கும். செயல்களில் தன்னம்பிக்கை குறையும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. உடல்நலனின் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டிய மாதம் இது. கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக பேசுவது அவசியம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் வணிகத்தில் சில ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களால் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்து விளங்குவர். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பணியிடங்களில் மாற்றம் உண்டாகலாம். வேலையில் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். அதிகாரிகள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய அறிமுகத்தில் கவனம் தேவை. முதலீடுகள் நல்ல பலனை தரும். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நிகழும் மாதம். தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். சில சமயங்களில் உங்கள் மனமும் அமைதியற்றதாக இருக்கும். நிதானமாக இருங்கள். அதீத வைராக்கியம் காட்டுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அரசு வழியில் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவது, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். ஆனால் தன்னம்பிக்கை குறையும். போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.