HT Yatra: 6 மாதம் வெள்ளை நிறம்..6 மாதம் கருப்பு நிறம்.. வித்தியாசமாய் காட்சியளிக்கும் விநாயகர்
Keralapuram Arulmigu Vinayagar: விநாயகரின் சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் விநாயகர் திருக்கோயில். பல்வேறு விதமான சிறப்புகளைக் கொண்ட திருக்கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகிறது.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் விநாயகர் முதலில் வணங்க வேண்டிய கடவுளாக விநாயகர் பெருமான் இருந்து வருகிறார் குறிப்பாக வட இந்தியா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு ஊர்வலம் நடத்தி மிகப்பெரிய விசேஷம் கொண்டாடப்படுகிறது.
இந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் வழங்க வேண்டிய தெய்வமாக விநாயகர் அமர்ந்திருப்பார். இந்த செயலை தொடங்கினாலும் விநாயகரை வழங்கிவிட்டு தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி யாருக்கும் மூத்த மகனாக திகழ்ந்து வருகிறார் விநாயகர். மரத்தடி தொடங்கி மழை ஊற்று வரை அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற கடவுளாக திகழ்ந்து விடுகிறார்கள். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான கோயில்கள் அமைக்கப்பட்டு சிறப்பு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்ட வருகிறது. அனைத்து இடங்களிலும் அமர்ந்திருக்கக்கூடிய கடவுளாக விநாயகர் திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் விநாயகரின் சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் விநாயகர் திருக்கோயில். பல்வேறு விதமான சிறப்புகளைக் கொண்ட திருக்கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகிறது.
தல பெருமை
அரச மரத்தடியின் கீழ் அமர்ந்திருக்க கூடிய விநாயகர் சற்று வித்தியாசமானவர். இவர் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை வெள்ளை நிறமாக காட்சி கொடுப்பார். அதற்குப் பிறகு ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.
அரச மரத்தடியில் இருக்கக்கூடிய இவருக்கு மேற்கூரை கூட கிடையாது ஆனால் இவரை காண்பதற்கு பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆறு மாதம் ஒரு நிறமாகவும், ஆறு மாதம் வேறு நிறம் ஆகவும் காட்சியளிக்க கூடியவர் இவர்.
வெள்ளை நிறத்தில் காட்சி கொடுத்து வந்த விநாயகர் ஆடி மாதம் தொடங்கிய பிறகு அவரது திருமேனியில் ஆரம்ப காலகட்டத்தில் கருப்பு புள்ளிகள் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருமை நிறம் முழுமையாக மாறி கருப்பு திருமேனியாக விநாயகர் காட்சி கொடுத்தார்.
அதற்குப் பிறகு இதனை ஆராய்ச்சி செய்த புவியியல் துறை நிபுணர்கள் இது இந்திர காந்தம் என்னும் அபூர்வ வகை கல்லால் செய்யப்பட்டது என கூறியுள்ளனர்.
தல வரலாறு
ராமநாதபுரம் மன்னரை காண்பதற்காக வீரகேரள வர்மா என்ற மன்னர் ராமேஸ்வரம் நோக்கி வந்துள்ளார். அப்போது அங்கு இருக்கக்கூடிய அக்னி தீர்த்தத்தில் நீராடியுள்ளார். அவருடைய காலடியில் அப்போது ஒரு கல் தட்டுப்பட்டு உள்ளது. உடனே அந்த கல்லை அவர் எடுத்துப் பார்த்துள்ளார் அந்த கல் விநாயகர் திருமேனியை கொண்ட உருவத்தில் இருந்துள்ளது.
உடனே அதனை எடுத்துக்கொண்டு ராமநாதபுரம் மன்னரை வீரகேரளவர் மன்னர் சந்தித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கூறியுள்ளார். இது விநாயகர் சிலை போலத்தான் தெரிகிறது இதை உங்கள் ஊரில் வைத்து பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள் இதை நான் உங்களுக்கு பரிசாக கொடுக்கிறேன் என ராமநாதபுரம் மன்னர் கூறியுள்ளார்.
உடனே கேரள வர்மா மன்னர் அதனை கேரளபுரம் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது அந்த கோயில் இருக்கக்கூடிய இடத்தில் அந்த சிலையை வைத்து அருகே ஒரு அரச மரம் கன்றை வைத்து தினமும் பராமரித்து பூஜை செய்து வந்துள்ளார். நாளடைவில் அரச மரமும் வளர்ந்தது அதனுடன் விநாயகர் சிலையும் வளர்ந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் ஆறு அங்குலம் இருந்த விநாயகர் சிலை நாளடைவில் 18 அங்குலம் வளர்ந்து நின்றுள்ளது. தற்போது அந்த அரச மரத்தடியில் கம்பீரமாக விநாயகர் காட்சி கொடுக்கிறார்.
அமைவிடம்
இந்த திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்ல வாகன வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் அனைத்தும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9