Marriage Horoscope: திருமண பொருத்தம் பார்க்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள்!
Marriage Horoscope: திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனமாக கணிக்க வேண்டிய நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் இதோ!
திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனமாக கணிக்க வேண்டிய நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் இதோ!
மூலம்
கேது பகவானின் நட்சத்திரங்களில் ஒன்றான மூலம் நட்சத்திரத்திற்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது தேர்வு செய்யும் வரனை சரியான படி தேர்வு செய்யவில்லை என்றால் பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரம் திருமண வாழ்கை வேண்டாம் என்ற சூழ்நிலைக்கு அழைத்து செல்லும். தான் என்கிற கர்வத்தை அதிகம் தரக்கூடிய நட்சத்திரம் ஆக உள்ள மூலம் நட்சத்திரக்காரர்கள் வாழ்கை துணையை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பரணி
பரணி நட்சத்திரம் செவ்வாய் வீட்டில் உள்ளது. செவ்வாய், சுக்கிரன் தொடர்பு என்பது குணத்தை கெடுக்கும். அதிக கோபத்திற்கு ஆளாகும் நட்சத்திரமாக பரணி நட்சத்திரம் உள்ளது. இவர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதால் திருமண பொருத்தம் கவனமாக இருப்பது அவசியம்.
கார்த்திகை
சூரியனின் நட்சத்திரங்களில் ஒன்றான கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். சூரியன் என்பது தான் என்ற எண்ணம், தலைமை பதவி, அகம்பாவம், கர்வம், விட்டுக் கொடுக்காத தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அடிபணிந்து செல்லும் எண்ணம் இருக்காது. இதனால் இவர்களை அனுசரித்து செல்லும் வாழ்கை துணை இருப்பது அவசியம்.
அஸ்தம்
சந்திரனின் நட்சத்திரமாக அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. அஸ்தம் கை வைத்த இடம் பஸ்பம் என்ற பழமொழியே ஜோதிடத்தில் உள்ளது. மனக்கசப்பு, பிரிவுகள், சங்கடம், குணக்கேடுகள் அதிம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொருத்தம் பார்ப்பதில் கவனம் அவசியம்.
அவிட்டம்
செவ்வாய் ஆக்ரோஷம் மிக்க கிரகம் ஆகும். அவிட்டம் நட்சத்திரம் செவ்வாயின் நட்சத்திரம் ஆக உள்ளது. துணிச்சல், ஆக்ரோஷம், கோபம் ஆகியவை அவிட்டம் நட்சத்திரத்திற்கு சில சிக்கல்களை கொடுக்கும். இவர்களுக்கு அமையும் திருமண வாழ்கை துணை இவர்களின் வேகம் மற்றும் கோபத்தை தடை போடுபவர்களாக இருக்க வேண்டும்.
சதயம்
ராகுவின் நட்சத்திரம் ஆன சதயம் நட்சத்திரம் சனி பகவானின் வீடான கும்பத்தில் உள்ளது. இவர்களின் 7ஆம் இடமாக சூரியனின் வீடு உள்ளதால் திருமண பொருத்தம் பார்ப்பதில் தனி கவனம் செலுத்துவது அவசியம்.
விசாகம்
குரு பகவானின் விசாகம் நட்சத்திரம் ஆனது சுக்கிரன், செவ்வாய் வீடுகளில் உள்ளது. பொறுமை, சகிப்புத் தன்மை உடன் விட்டுக் கொடுத்து செல்லும் குணம் நிறைந்த நட்சத்திரம் என்றாலும் இவர்களை அனுசரித்து செல்லும் வாழ்கை துணைக்கு ஏற்ற பொருத்தத்தை பார்ப்பது நன்று.
அனுஷம்
சனிபகவானின் நட்சத்திரம் ஆன அனுஷம் நட்சத்திரம் ஆனது செவ்வாய் வீட்டில் உள்ளது. இதனால் யார் பெரியவர் என்ற ஆளுமை திறன் வெளிப்படும். இவர்களுக்கு ஜாதக கட்டங்கள் சேர்ப்பதில் கவனம் செலுத்துவது வாழ்வியல் சிறப்புகளை பெற்றுத் தரும்.
கேட்டை மற்றும் ஆயில்யம்
புதனின் நட்சத்திரம் ஆன கேட்டை மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு ஜாதக கட்டங்கள் சிறப்பாக இருக்கிறதா என்று பார்த்தே அமைக்க வேண்டியது அவசியம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.