ஆந்தை ஒலியை எந்த திசையில் கேட்டால் பணம் குவியும் பாருங்க.. வீட்டில் ஆந்தை சிலையை வைக்கலாமா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆந்தை ஒலியை எந்த திசையில் கேட்டால் பணம் குவியும் பாருங்க.. வீட்டில் ஆந்தை சிலையை வைக்கலாமா!

ஆந்தை ஒலியை எந்த திசையில் கேட்டால் பணம் குவியும் பாருங்க.. வீட்டில் ஆந்தை சிலையை வைக்கலாமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 06, 2024 10:47 PM IST

அழகான ஆந்தை பொம்மைகளும் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வீட்டில் வைத்திருப்பவர்களும் உண்டு. அத்தகைய ஆந்தை பொம்மைகளை வீட்டில் வைத்திருப்பது நல்லதா? இது குறித்து வாஸ்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஆந்தை ஒலியை எந்த திசையில் கேட்டால் பணம் குவியும் பாருங்க..  வீட்டில் ஆந்தை சிலையை வைக்கலாமா!
ஆந்தை ஒலியை எந்த திசையில் கேட்டால் பணம் குவியும் பாருங்க.. வீட்டில் ஆந்தை சிலையை வைக்கலாமா!

தீபாவளியின் போது சில இடங்களில் லட்சுமியை வழிபடுவார்கள். சில வீடுகளில் லட்சுமி பூஜையின் போது ஆந்தை பொம்மைகள் வைக்கப்படும். ஆனால் இந்த ஆந்தை பொம்மை சுபமா அல்லது அசுபமா? பொம்மை வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்தால் என்ன நடக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆந்தை சிலை அல்லது பொம்மை வைப்பது மங்களகரமானது. ஆந்தை வீட்டில் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் மகாலட்சுமியின் வாகனமாக பார்க்கப்படுகிறது. இந்து மத சாஸ்திரத்தில் ஆந்தை ஒருவருக்கு வரக்கூடிய நன்மை தீமைகளை முன்கூட்டியே அறிவுறுத்தும் ஒன்றான ஆந்தை பார்க்கப்படுகிறது.

ஆந்தை அச்சுறுத்துவது போல் தோற்றத்தை கொண்டிருப்பதல் பலர் அதை பார்த்து பயப்படுகின்றனர். ஆனால் ஆந்தை அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுவாக காலையில் கிழக்கு திசையில் ஆந்தையை பார்த்தாலோ, அல்லது அதன் சத்தத்தை கேட்டோலோ எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. ஆந்தை நோய் வாய்ப்பட்ட ஒருவரின் தலை மேல் பறந்து செல்வது அவரது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.

ஆந்தை பொம்மை வீட்டில் இருந்தால் வளத்திற்கு பஞ்சமில்லை. இருப்பினும் வீட்டில் ஆந்தை சிலை வைக்க வேண்டும் என்றால் சில விதிகளை கடைபிடிப்பது நல்லது.

வீட்டில் ஆந்தை பொம்மை வைப்பதற்கு விதிகள் உள்ளன. ஆந்தை பொம்மையை அலுவலகத்தில் வைத்திருந்தால், மேசையின் வட மேற்கு மூலையில் வைப்பது சுபம். அங்குதான் நேர்மறை ஆற்றல் வருகிறது. ஆந்தை சிலையை இந்த திசையில் வைத்தால் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். வீட்டின் பிரதான நுழைவாயிலை நோக்கி ஒரு ஆந்தை பொம்மையை வைக்கலாம். எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கிறது.

வீட்டில் ஆந்தை பொம்மையை வைப்பதை விட சிலை வைப்பது நல்லது. பித்தளையால் செய்யப்பட்ட ஆந்தை சிலையை வீட்டில் வைத்திருப்பது புனிதமாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் உருவத்திற்கு முன்னால் உள்ள பலிபீடத்தில் ஆந்தை சிலையை நிறுவ விரும்பினால், வெள்ளிக்கிழமை நல்லது. அன்று பலிபீடத்தை கங்கை நீரால் சுத்தம் செய்து லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.

தீபாவளி நாளில் வீட்டிற்கு ஆந்தை சிலைகளை வாங்கலாம். திருவிழாவின் போது வீட்டில் ஆந்தை சிலையை அலங்கரிக்கலாம். வீட்டில் ஒரு ஜோடி ஆந்தை சிலை வைப்பது மங்களகரமானது. இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்