HT Temple Special: உங்கள் தலையெழுத்தை மாற்ற வேண்டுமா?-இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Special: உங்கள் தலையெழுத்தை மாற்ற வேண்டுமா?-இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்க!

HT Temple Special: உங்கள் தலையெழுத்தை மாற்ற வேண்டுமா?-இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்க!

Manigandan K T HT Tamil
Apr 03, 2024 03:31 PM IST

HT Temple Special: வேதங்கள் நான்கும் மனித உருக்கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலரெடுத்து வந்து திருக்கோயிலின் வடக்குபுறம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள வேதாமிருத ஏரியில் நீராடி இறைவனை போற்றி வழிபாடு செய்தன.

வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்
வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்

வேதங்கள் நான்கும் மனித உருக்கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலரெடுத்து வந்து திருக்கோயிலின் வடக்குபுறம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள வேதாமிருத ஏரியில் நீராடி இத்திருக்கோயில் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடிய பின்னர் இத்தலத்து இறைவனை போற்றி வழிபாடுகள் செய்தன.

பின்னர் இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்துவிட்டு சென்றுவிட்டன. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டிவாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் தேவாரத் தமிழ்ப்பதிகம் பாடித் திறக்கவும், மீண்டும் திருக்கதவு தாள் செய்யப்படுதலும் நிகழ்ந்தன.

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாக உள்ள தலமிது. கோயில் திருவிளக்கை நன்கு எரியும் வகையில் தூண்டிய எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்கும் படி இறைவன் அருளிய திருத்தலம்.

இத்தலத்தின் தியாகராஜர் புவனி விடங்கர் என்றும் அவரது நடனம் ஹம்சபாத நடனம் என்றும் இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என்றும் அறியப்படுகிறது. "வேதாரண்யம் விளக்கழகு" என்று இக்கோயிலுக்குப் பெருமை உண்டு.

அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர் ஆகியோர் வழிபட்ட தலம் இது.

சிந்தாமணி விநாயகர்

சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் சிந்தாமணி எனும் மணியைத் தரித்துக் கொண்டதால் ஏற்பட்டதாகும். அபிஜித் என்பவனுக்கும், குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் கபிலர் தனக்களித்த விருந்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு கபிலரிடமிருந்து அம் மணியைப் பறித்துக் கொண்டு வந்துவிட, கபிலர் விநாயகரை நோக்கி யாகம் புரிந்து அந்த மணியை மீட்டுத்தர வேண்டினார். சித்தி, புத்தி தேவிகளுடன் சிங்க வாகனத்தில் தோன்ற விநாயகர் தனது திருக்கைப் பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து சிந்தாமணியை கபிலரிடம் கொடுத்தார். இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது. திருமறைக் காட்டில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சிந்தாமணி விநாயகர் ஆவார்.

கருவறை கிழக்கே நோக்கியது. கருவறை அதனையொட்டி அர்த்தமண்டபம்‌ மகாமண்டபம்‌. தியாகேசர்‌ மண்டபம்‌ முதலியன உள்ளன. கருவறையைச்‌ சுற்றி திருச்சுற்று மாளிகை உள்ளது. இத்திருச்சுற்றில்‌ கருவறைக்கு நேர்‌ கிழக்காகச்‌ சிறிய கோபுரம்‌ ஒன்று உள்ளது. இக்கோபுரத்தை ஒட்டி நீண்ட தூண்‌ மண்டபம்‌ ஒன்று உள்ளது. பின்னர்‌ இரண்டாம்‌ திருச்சுற்றில்‌ வடக்கே அன்னை ஆலயமும்‌ உள்ளது. இறுதியாகக்‌ கோவிலைச்‌ சுற்றி பெருமதிலும்‌, கிழக்கும்‌, மேற்கும்‌ இரண்டு கோபுரமும்‌ இருக்‌கின்றன. இவை தவிர பரிவார ஆலயங்களும்‌, தீர்த்தங்களும்‌ பிற மண்டபங்களும்‌ ஆங்காங்கு உள்ளன. தலை எழுத்தை மாற்றும் வலிமைப்படைத்த இந்த ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்