HT Yatra: தம்பியை அமைதிப்படுத்த எடுத்த அவதாரம்.. எளிமையாக அமர்ந்திருக்கும் விநாயகர்.. ஆறுமுகத்தோடு பிள்ளையார்
Arumuga Vinayagar: இந்த திருக்கோயிலில் மூலவராக ஆறுமுக விநாயகர் விளங்கி வருகின்றார். மேலும் சுந்தர விநாயகரும் இங்கு காட்சி கொடுத்து வருகிறார். பின்னர் ஆண்டி கோலத்தில் முருக பெருமானும் காசி விஸ்வநாதர் மற்றும் காளியம்மன் உள்ளிட்டோர் இந்த கோயிலில் காட்சி கொடுத்து வருகின்றனர்.
ஒரு செயல் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு பிள்ளையார் சொல்லி அவசியம் என்று காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. முழு முதற்கடவுளாக முதலில் வணங்க வேண்டிய கடவுளாக இன்றுவரை விநாயகப் பெருமான் இருந்து வருகிறார்.
உலகம் முழுவதும் தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் விநாயகர். குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை இவர் வைத்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக இந்தியாவில் கொண்டாடப்படுவது வழக்கம்.
சாமானிய மனிதர்களுக்கும் காட்சி கொடுக்கக்கூடிய எளிமையான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். பல்வேறு விதமான சிறப்புகளைக் கொண்ட பல கோயில்களில் விநாயகர் காட்சி கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆறுமுக விநாயகர் திருக்கோயில்.
இந்த திருக்கோயிலில் மூலவராக ஆறுமுக விநாயகர் விளங்கி வருகின்றார். மேலும் சுந்தர விநாயகரும் இங்கு காட்சி கொடுத்து வருகிறார். பின்னர் ஆண்டி கோலத்தில் முருக பெருமானும் காசி விஸ்வநாதர் மற்றும் காளியம்மன் உள்ளிட்டோர் இந்த கோயிலில் காட்சி கொடுத்து வருகின்றனர்.
தலத்தின் பெருமை
இந்த ஆறுமுக விநாயகர் திருக்கோயில் சிறிய ஆலயம் தான். ஆனால் ஆறுமுகங்களோடு விநாயகர் காட்சி கொடுப்பது மிகப்பெரிய விசேஷமாகும். இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலில் வழிபட்டால் சகல ஞானங்களும் மற்றும் யோகங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு அருகில் இருக்கக்கூடிய சண்முகா நதியில் நீராடி விட்டு ஆறுமுக விநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி திருநாளில் ஊறவைத்த பச்சரிசி, மிளகு, சீரகம், வெல்லம், நல்லெண்ணெய் கலந்து விநாயகருக்கு படைத்தால் கல்வி மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என நம்பப்படுகிறது.
தல வரலாறு
முருகப்பெருமான் சூரனோடு போரிட்டு அவரை வீழ்த்தினார் அப்போது அவருடைய உக்கிரம் தணியாமல் கடுமையான கோபத்தில் இருந்துள்ளார். இதனைக் கண்ட விநாயகர் தனது தம்பியின் உக்கிரத்தை குறைக்க வேண்டும் என நினைத்துள்ளார்.
உடனே ஆறுமுகங்களோடு உக்கிர கோபத்தில் இருந்த முருக பெருமானை போல தானும் ஆறுமுகத்தோடு அவர் முன்பு விநாயகர் நின்றுள்ளார். இதனைக் கண்ட முருகப்பெருமான் உடனே சிரித்து விட்டார். அவருடைய கோபம் குறைந்துள்ளது. இப்படி ஒரு கதை உலா வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆறு முகத்தைக் கொண்ட விநாயகர் பெருமான் தலமாக இந்த திருத்தலம் விளங்கி வருகிறது.
சிறிய கோயிலில் ஆறுமுகங்களோடு விசேஷமாக விநாயகர் காட்சி கொடுப்பது என்பது எங்கும் காண முடியாத அரிதான காட்சியாகும். அது இந்த திருக்கோயிலில் இருப்பது மேலும் சிறப்பாகும்.
அமைவிடம்
இந்த திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்ல வாகன வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் அனைத்தும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9