Vastu Tips: வீட்டில் எந்த திசையில் கண்ணாடி வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்க கூடாது என்பது தெரியுமா?
Vastu Tips: தவறான திசைகளில் கண்ணாடிகளை வைக்கும் போது வீட்டில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். கண்ணாடியை நிறுவும் போது வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கிறது என்று கூறப்படுகிறது. வீட்டில் கண்ணாடிகள் பொருத்துவது தொடர்பான வாஸ்து விதிகளை தெரிந்து கொள்வோம்...
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பற்றி விவரிக்கும் சாஸ்திரம் ஆக உள்ளது. ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் முறைகளை வேதம் சார்ந்து வாஸ்து விளக்குகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை நோக்கம், மனிதர்களும் இயற்கையும் ஒற்றுமையாக இணைந்து வாழும் ஒரு சூழலை உருவாக்குகிறது என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது. வாஸ்து சாஸ்திரம் என்பது உடல் நலம், மன அமைதி, பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வாஸ்து காரணமாக அமைகின்றது. வாஸ்து விதிகளை பின்பற்றுவது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சரியாக இருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரும் என்பது நம்பிக்கை.
வாஸ்துவில் திசைகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வீட்டில் கண்ணாடிகளை நிறுவும் போது, வாஸ்துவின் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சரியான திசையில் கண்ணாடியை வைப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
அதே நேரத்தில், தவறான திசைகளில் கண்ணாடிகளை வைக்கும் போது வீட்டில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். கண்ணாடியை நிறுவும் போது வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கிறது என்று கூறப்படுகிறது. வீட்டில் கண்ணாடிகள் பொருத்துவது தொடர்பான வாஸ்து விதிகளை தெரிந்து கொள்வோம்...
வீட்டில் கண்ணாடி வைப்பதற்கான வாஸ்து குறிப்புகள்:-
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கண்ணாடி வைப்பது எப்போதும் மங்களகரமானது. வடகிழக்கு திசையில் வைக்கப்படும் கண்ணாடி செல்வத்தை ஈர்க்கும் என்பது ஐதீகம்.
இது தவிர, வடக்கு அல்லது கிழக்கு திசையில் கண்ணாடி வைப்பது நிதி ஆதாயத்திற்கு நன்மை பயக்கும்.
வாஸ்து படி, வீட்டில் அழுக்கு மற்றும் உடைந்த கண்ணாடிகளை வைத்து இருக்க கூடாது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் முன்னேற்றப் பாதையில் தடைகளை சந்திக்க நேரிடும் என்பது நம்பிக்கை.
மேற்கு அல்லது தெற்கு சுவர்களில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.
வாஸ்து படி, சமையலறையில் கண்ணாடியை நிறுவுவது நல்லதாக கருதப்படுவதில்லை. இதனால் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
படுக்கையறையில் கூட கண்ணாடிகள் நிறுவப்படக்கூடாது என்று என்று வாஸ்து விதிகள் கூறுகின்றன. கண்ணாடியில் படுக்கையின் பிரதிபலிப்பு வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
வாஸ்துவில் எண்கோண கண்ணாடியை நிறுவுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே சமயம் ஸ்டோர் ரூமில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்