Sani Bagawan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?-how lord saturn affects mesham rishabam mithunam kadagam simmam kanni lagnam - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bagawan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?

Sani Bagawan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?

Kathiravan V HT Tamil
Sep 24, 2024 04:19 PM IST

மேஷம் முதல் கன்னி வரையிலான லக்னத்திற்கு சனி பகவான் தரும் நன்மை, தீமைகள் குறித்து தற்போது பார்க்கலாம்…!

Sani Bagawan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?
Sani Bagawan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?

ரிஷபம்

ரிஷப லக்ன ஜாதகர்களுக்கு சனி பகவான் ராஜ யோகதிபதி ஆவார். அவர் பாதகாதிபதியாக செயல்பட்டாளும் பெரும் பாதகத்தை தருவது இல்லை. இவர்களுக்கு சனி எங்கிருந்தாலும் வாழ்க்கையில் வளர்ச்சி, முன்னேற்றம், யோகம், அதிர்ஷ்டம், பொருளாதார வெற்றி, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ஆகியவற்றை சனி பகவான் கொடுப்பார். ரிஷப லக்னத்திற்கு சனி திசை பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டிய ஒரு திசையாகும்.

மிதுனம்

மிதுன லக்ன ஜாதகத்திற்கும் சனி பகவான் நல்லவர்தான். ஆனால் எட்டாம் இடத்தில் கெடுதலையும் கொடுக்கக்கூடியவர் என்பதால் பாதி நன்மை மற்றும் பாதி தீமைகளை தர வல்லவர். இவர்களுக்கு பெரும்பாலும் கலப்பு பலன்களாகவே இருக்கும். பிரச்னைகளுக்கு பின்னர் நன்மைகளை கிடைப்பது மாதிரியான பலன்கள் இவர்களுக்கு கிடைக்கும்.

கடகம்

கடக லக்னத்தின் அதிபதி சந்திரனுக்கும் சனி பகவானுக்கும் ஆகாது. கடக லக்ன ஜாதகர்களுக்கு ஏழாம் இடம் மிக முக்கிய ஸ்தானத்திற்கு ஆதிபத்தியம் பெறக்கூடிய சனி பகவான் அட்டமாதிபதிங்கிற ஆதிபத்தியும் கொண்டு உள்ளார். இவர்களுக்கு சனி திசை மிகப்பெரிய பிரச்னைகளை கொடுக்கும். உபஜய ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 3, 6, 10, 11ஆம் இடங்களில் சனி பகவான் இருந்தால் ஓரளவு பிரச்னைகள் குறையும்.

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு ஆகாத கிரகம் ஆக சனி பகவான் உள்ளார். 3, 6, 10, 11 என்ற மறைவு ஸ்தானத்திலோ அல்லது நட்பு வீடுகளிலோ சூரியன் இருந்தால் ஓரளவு பிரச்னைகள் குறையும். இவர்களுக்கு சனி பகவான் 10 மற்றும் 11ஆம் இடங்களில் இருந்தால் மிக சிறப்பை தரும். இல்லாத பட்சத்தில் குருவின் பார்வை, குருவின் இணைவு கட்டாயம் இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி

கன்னி லக்னத்திற்கு சனி பகவான் ஆனவர் 5 மற்றும் 6ஆம் இடத்திற்கு அதிபதி ஆவார். இவர்களுக்கு 70% நற்பலனும் 30% கெடுதல் பலனையும் சனிபகவான் தரக்கூடியவர். ஆறாம் ஆன கும்பம் ராசியே சனி பகவானுக்கு மூல திரிகோணம் வீடாக வருகின்றது. கன்னி லக்னத்தை பொறுத்தவரை சனி பகவான் நல்ல வேலைகளை வாங்கிக் கொடுப்பது, நல்ல கடனை பெற்றுத் தருவது, கடன் மூலமாக முன்னேற்றத்தை தருவது போன்ற சூட்சும பலன்களை செய்வார். ஐந்தாம் இடம் என்கின்ற பூர்வ புண்ணிய ஸ்தானம் புத்திரர்களின் வலிமை கௌரவம் புகழ் அந்தஸ்து குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் போன்ற மிக முக்கியமான விஷயத்தையும் சனி பகவானே தனது தசை காலங்களில் செய்வார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner