Chevvai Vagra Peyarchi 2024: வக்ர பெயர்ச்சி அடையும் செவ்வாய்! வீடு, நிலம், வாகனம் வாங்க போகும் 3 ராசிகள்!-how lord chevvai in vakram position will benefit mesham kadagam and kanni rasi in december - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chevvai Vagra Peyarchi 2024: வக்ர பெயர்ச்சி அடையும் செவ்வாய்! வீடு, நிலம், வாகனம் வாங்க போகும் 3 ராசிகள்!

Chevvai Vagra Peyarchi 2024: வக்ர பெயர்ச்சி அடையும் செவ்வாய்! வீடு, நிலம், வாகனம் வாங்க போகும் 3 ராசிகள்!

Kathiravan V HT Tamil
Aug 30, 2024 09:14 PM IST

Chevvai Vagra Peyarchi 2024: டிசம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 05:01 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24, 2025 வரை திங்கள் காலை 07:27 மணி வரை செவ்வாய் பகவான் வக்ர நிலை பெற்று இருப்பார். இது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு சுபமான மற்றும் அசுபமான விளைவை ஏற்படுத்தும்.

Chevvai Vagra Peyarchi 2024: வக்ர பெயர்ச்சி அடையும் செவ்வாய்! வீடு, நிலம், வாகனம் வாங்க போகும் 3 ராசிகள்!
Chevvai Vagra Peyarchi 2024: வக்ர பெயர்ச்சி அடையும் செவ்வாய்! வீடு, நிலம், வாகனம் வாங்க போகும் 3 ராசிகள்!

கடகம் ராசியில் வக்ரம் பெறும் செவ்வாய் 

ஏற்கெனவே புதன் மற்றும் சனி கிரகங்கள் வக்ரம் பெற்று உள்ளன. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஆற்றலையும் நம்பிக்கையையும் தரும் செவ்வாய், கடகத்தில் வக்ரம் பெற உள்ளார். வரும் டிசம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 05:01 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24, 2025 வரை திங்கள் காலை 07:27 மணி வரை செவ்வாய் பகவான் வக்ர நிலை பெற்று இருப்பார். இது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு சுபமான மற்றும் அசுபமான விளைவை ஏற்படுத்தும். ஜோதிட கணக்கீடுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் செவ்வாய் வக்ரம் பெறுவதன் மூலம் சில ராசிக்காரர்கள் பெரிதும் பயனடைவார்கள்.  

மேஷம்

செவ்வாய் பகவானின் ராசியான மேஷம் ராசிக்கு செவ்வாயின் வக்ர நிலை நன்மைகளை தருவதாக அமைந்து உள்ளது. இது வாழ்க்கையில் நன்மை தரக்கூடிஅய் மாற்றங்களை ஏற்படுத்தும். நிலம் மற்றும் வாகனம் வாங்கும் யோகம் செவ்வாய் பகவானின் வக்ர பெயர்ச்சி மூலம் உண்டாகும். 

மேஷம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கி சுமூக நிலையை அடைவீர்கள். உங்களின் சமூக கௌரவம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறக்கும். உடன்பிறந்தோருடனான சொத்து தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படும்.

கடகம்

செவ்வாய் பகவானின் வக்ரம் கடக ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை ஏற்படுத்தி தருவதாக அமையும். இவர்களுக்கு தைரியமும் வீரமும் கூடும். வெற்றி உங்கள் கால்களை முத்தமிடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களை சந்திப்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் தூக்க அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் காலமாக செவ்வாய் வக்ர பெயர்ச்சி காலம் இருக்கும். செவ்வாயின் வேகத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக புதிய வருமான ஆதாரங்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். வாழ்க்கை சுகபோகங்களில் கழியும். சமூகத்தில் மரியாதை உயரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.