வக்ரம் பெறும் குரு! அடுத்த 150 நாட்களுக்கு அடித்து தூக்கப்போகும் 3 ராசிகள்! அடேங்கப்பா!
By Kathiravan V Aug 21, 2024
Hindustan Times Tamil
இந்த நேரத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் குரு பகவான் வக்ரம் பெற்று பின்னோக்கி செல்ல உள்ளார். இந்த நிலையானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு பல்வேறு சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்.
தேவ குரு என அழைக்கப்படும் குரு பகவான் ஆனவர் கடந்த மே மாதத்தில் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து இருந்தார். அடுத்த ஆண்டு மே 13ஆம் தேதி வரை அந்த ராசியில் இருப்பார்.
குரு பகவான் மூலமாகவே நாம் உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுகிறோம். ஞானம் என்பது அறிவின் உச்ச நிலை. குரு பகவான் ஞானத்தின் உண்மையான அடையாளமாகக் கருதப்படுகிறார். குரு பகவானின் அருளால் வாழ்க்கை வளம் பெறும்.
குருவின் நகர்வு மூலம் நன்மைகளை அடையும் ராசிகளில் ஒன்றாக கன்னி ராசி உள்ளது. உங்கள் தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும்.வேலையில் நீங்கள் பல முக்கியமான பணிகளை செய்ய நேரிடலாம். கன்னி ராசிக்கு சுபிட்சம் வந்து சேரும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே குரு உள்ளதால் பணவரவு அதிகரிக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் உறுதி ஆகும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்படும். செலவுகளும் அதிகரிக்கலாம் என்பதால் அதற்கு ஏற்ப திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. இந்த காலகட்டத்தில், புதிய வேலைகளைத் தொடங்குவது நன்மைகளை தரும். திருமணம் ஆன ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இனிமையான திருமண வாழ்கை அமையும்.
தொழில் துறையில் உள்ள சிம்மம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். குருபகவானின் நல்ல செல்வாக்கால், உங்கள் நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.