தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Regunathapuram Sree Vallabai Ayyappan Temple

கேட்ட வரம் தரும் ஸ்ரீவல்லபை ஐயப்பன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 15, 2022 07:15 PM IST

ரகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில் குறித்து இங்கே காணலாம்.

ஸ்ரீவல்லபை ஐயப்பன்
ஸ்ரீவல்லபை ஐயப்பன்

ட்ரெண்டிங் செய்திகள்

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில்ல் பீடி, சிகரெட் போன்ற லாகரி வஸ்துகளை தவிர்த்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள். கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து 48 நாட்கள் மாலை அணிந்து சபரிமலை செல்கின்றனர்.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் சபரிமலை புறப்படும் வரை ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயிலில் தினசரி பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. மேலும் எரிமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் வெகு விமர்சையாக இந்த கோயிலில் நடைபெறுகிறது.

வணங்க நினைத்தாலே வாழ்வை உயர்த்தும் ஸ்ரீ வல்லபாய் ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வணங்கி வருகின்றனர். 

குழந்தை பாக்கியம் வேண்டுதல், திருமண தடை நீங்குதல் ஆகியவைகளுக்காக ஐயப்பனை வேண்டிக் கொண்டு மாலை அணிந்து 48 நாட்கள் விரதமும் இருந்து நேர்த்திக்கடனை செலுத்தினால் அடுத்த ஆண்டு அவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை.

பிளாஸ்டிக்கில்லா இருமுடி, முறையாக 48 நாட்கள் விரதம் கடைபிடித்தவர்களுக்கு மட்டும் இருமுடி கட்டுதல், பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் கட்டுப்பாடு உள்ளிட்ட உறுதிமொழிகளோடு இந்த கோயில் தனி சிறப்புடன் செயல்படுகிறது.

WhatsApp channel