HT Yatra: மாணிக்கவாசகர் கொண்ட காதல்.. கோயிலாக அமர்ந்த ஆத்மநாத சுவாமி.. சிதம்பரத்தில் சிவபெருமான்
HT Yatra: எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் நிறைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில்.
HT Yatra: சிவபெருமானுக்குன்னு மிகப்பெரிய கூட்டம் பக்தர்களாக இருந்து வருகிறது. கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வரக்கூடிய சிவபெருமான் இன்றுவரை தனக்கான பக்தர்களுக்கு சிறப்பான ஆசீர்வாதங்களை கொடுத்து வருவதாக அவருடைய பக்தர்கள் நம்பி வருகின்றனர்.
அனைத்திற்கும் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்ப காலத்திலும் சிவபெருமானுக்கான பக்தர்களும் வழிபாடுகளும் குறைந்தபாடு கிடையாது. இந்தியாவில் சிவபெருமானுக்கு நம் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்தாலும் குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மன்னர்கள் காலத்தில் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்களை கட்டி மன்னர்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.
இதுபோல எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் நிறைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஆத்மநாத சுவாமி எனவும் தாயார் யோகாம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன. தீர்த்தம் பாற்கடல் தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
திருவாசகத்தில் எழுதிய மாணிக்கவாசகரா இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் ஒரு முறை இங்கு தங்கி இருந்த பொழுது சிவபெருமான் அடியார் போல வேடமடைந்து வந்துள்ளார். மாணிக்கவாசகர்ரிடம் உங்கள் பாடலை நான் கேட்க விரும்புவதாக கூறியுள்ளார்.
மாணிக்கவாசகர் பாடிய பாடல்களை சிவபெருமான் தொகுத்து இந்த பாடல்கள் மாணிக்கவாசகரா திருவாய் மலர்ந்த வண்ணம் எழுதப்பட்டது என திருச்சிற்றம்பலம் உடையார் என கையெழுத்திட்டார். அதன் பின்னர் மறுநாள் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் அதை வைத்து விட்டு மறைந்து விட்டார். திருவாசகம் குறித்து மாணிக்கவாசகர் இடம் வேத பண்டிதர்கள் விளக்கம் கேட்டனர்.
அப்போது அந்த இடத்திற்கு அடியாராக வந்த சிவபெருமானை கைகாட்டி இவரே இதன் பொருள் எனக் கூறி மாணிக்கவாசகர் அவரோடு கலந்து விட்டார். இதன் காரணமாக இந்த திருக்கோயிலில் முகப்பு பக்கத்தில் சிவபெருமான் அடியார் வடிவில் காட்சி கொடுத்து வருகிறார். அதன் அருகே மாணிக்கவாசகர் அவரை கைகாட்டியபடி நிற்கின்றார்.
தல வரலாறு
மதுரையை ஆண்டு வந்து அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சரவையில் பணியாற்றியவர் தான் இந்த மாணிக்கவாசகர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் சிவபெருமானிடம் மாணிக்கவாசகர் உபதேசம் பெற்றார்.
மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் நரிகளை குதிரைகளாகவும், வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி திருவிளையாடல் செய்தார். மாணிக்கவாசகர் ஒருமுறை சிதம்பரம் வந்துள்ளார். அப்போது முனிவர்கள் தங்கி இருந்த ஒரு பர்ணசாலையில் மாணிக்கவாசகர் தங்கினார்.
இருப்பினும் திருப்பெருந்துறையில் இருக்கக்கூடிய ஆத்மநாதரை மாணிக்கவாசகரால் மறக்க முடியவில்லை. அதன் காரணமாக சிதம்பரத்தில் ஆத்மநாதருக்கு சிறிய கோயிலை மாணிக்கவாசகர் கட்டினார். அங்கு இருக்கக்கூடிய சுவாமிக்கு ஆத்மநாதர் எனவும், தாயாருக்கு யோகாம்பாள் எனவும் திருநாமத்தை சூட்டினார். தற்போது இந்த திருக்கோயில் தில்லை திருப்பெருந்துறை என விசேஷமாக அழைக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9