சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.. உங்களை தொட்டால் சனிக்கே சனி பிடிக்கும்.. தோல்வியே உங்களுக்கு வராது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.. உங்களை தொட்டால் சனிக்கே சனி பிடிக்கும்.. தோல்வியே உங்களுக்கு வராது!

சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.. உங்களை தொட்டால் சனிக்கே சனி பிடிக்கும்.. தோல்வியே உங்களுக்கு வராது!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 17, 2024 09:40 AM IST

Lord Shiva: சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை நினைத்த உடனேயே அவர்களுக்கு வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.. உங்களை தொட்டால் சனிக்கே சனி பிடிக்கும்.. தோல்வியே உங்களுக்கு வராது!
சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.. உங்களை தொட்டால் சனிக்கே சனி பிடிக்கும்.. தோல்வியே உங்களுக்கு வராது!

அண்ட சராசரங்களையும் ஆளக்கூடிய மற்றும் இரட்சிக்கக்கூடிய கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். தனது மனைவியான பார்வதி தேவிக்கு சரிபாதி உடலை கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்திய கடவுள்தான் சிவபெருமான்.

இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்கள் இந்த இடத்தை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வந்தனர். அதனால்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற நாமம் இன்றும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு எந்த கால சூழ்நிலைகளும் தேவையில்லை.

ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கின்படி சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை நினைத்த உடனேயே அவர்களுக்கு வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். செவ்வாய் பகவானால் ஆட்சி செய்யும் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உலகத்தை ஆட்சி செய்யும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான சிக்கல்களையும் சிவபெருமான் தீர்த்து வைப்பார். 

நினைத்த காரியங்கள் அனைத்தையும் செய்வதற்கு சிவபெருமான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். சிவபெருமானின் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானால் ஆட்சி செய்யும் ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். இயற்கையாகவே உங்களுக்கு புத்திசாலித்தனம் மிகவும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் சிவபெருமானின் விசேஷ அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிக அறிவு கூர்மை இருக்கும். அதனால் உங்களுக்கு முன்னேற்றம் தேடி வரும். 

வியாபாரத்தில் அவ்வப்போது சிறு நஷ்டங்கள் ஏற்பட்டாலும் பெரிய லாபங்கள் உங்களைத் தேடி வரும். ஏனென்றால் சிவபெருமான் உங்களுக்கு அருள் மழையை பொழிந்து கொண்டே இருப்பார். மகா சிவராத்திரி திருநாள் அன்று சிவபுராணம் படிப்பது உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

மகர ராசி

மிகப்பெரிய சிவபக்தனாக திகழ்ந்து வருபவர் சனி பகவான். அதனால் தான் சனிபகவானுக்கு ஈஸ்வரன் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட சிவபக்தனாக திகழ்ந்து வந்த சனீஸ்வரன் ஆட்சி செய்யும் ராசியாக நீங்கள் திகழ்ந்து வருகின்றீர்கள். கடுமையான உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் நீங்கள். உங்களுக்கு ஏழரை சனி நடந்தாலும் அந்த நேரத்தில் பெரிய துன்பங்களை கொடுக்காமல் சிவபெருமான் உங்களுக்கு அருள் கொடுப்பார். 

எத்தனை சிக்கல்கள் உங்களைத் தேடி வந்தாலும் அது உங்களை விட்டு எளிதில் விலகி விடும். ஏனென்றால் சிவபெருமானின் கடைக்கண் பார்வை உங்கள் மீது எப்போதும் இருக்கும். அச்சம் கொள்ளாமல் களம் இறங்குங்கள் சிவபெருமான் உங்கள் உடன் இருக்கிறார்.

கும்ப ராசி

சனிபகவானின் ஆஸ்த்தான ராசியாக திகழ்ந்து வருபவர்களில் நீங்களும் ஒருவர். உங்களை ஆட்சி செய்யும் சனீஸ்வர பகவானை ஆட்சி செய்யக்கூடியவர் சிவபெருமான். மிகப்பெரிய பக்தனாக திகழ்ந்து வரும் சனி பகவான், சிவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக ஈஸ்வரன் பட்டம் பெற்றார். எந்த பாதிப்புகள் உங்களை ஏற்பட்டாலும் சிவபெருமான் அதற்கு தீர்வு கொடுப்பார். 

அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரும். ஓம் நமசிவாய என்ற திருநாமம் ஒன்று போதும் உங்கள் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களும் தூரம் செல்லும். அதிகப்படியான நன்மைகளை சிவபெருமான் உங்களுக்கு கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண வைப்பார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner