தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See Those Zodiac Signs Who Get Raja Yoga Due To Transit Of Lord Venus

ராகு மீது பாய்ந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டம் கொட்டுவது உறுதி.. யோகக்காரர் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2024 11:41 AM IST

Lord Venus: சுக்கிர பகவானின் இடமாற்றமும் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையானது மாளவியா யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் பெறுகின்றார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவான் இணைகின்றார்.

சுக்கிர பகவானின் இடமாற்றமும் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையானது மாளவியா யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

மீனத்தில் சுக்கிரன் நுழைந்துள்ளதால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப்போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகமாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தையில் நல்ல வருமானம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுடைய காரியங்கள் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கன்னி ராசி

 

சுக்கிரனால் உங்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

 

 

சுக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். வருமானம் அதிகரிக்க கூடும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். நண்பர்களால் நல்ல பலன்கள் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel