தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chevvai Luck: செவ்வாய் உதயத்தால் ராஜ வாழ்க்கையை பெறப்போகும் ராசிகள்

Chevvai Luck: செவ்வாய் உதயத்தால் ராஜ வாழ்க்கையை பெறப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 02, 2024 03:50 PM IST

செவ்வாய் பகவானால் வாழ்க்கை உதயமாக போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தனுசு ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் ஜனவரி 17 ஆம் தேதியன்று உதயமானார் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய உதயத்தால் சுப பலன்களை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீட்டில் உதயமாகியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நினைத்த வேலை உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு விதமான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில தடைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் உதயமாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகி உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அப்போது சிக்கல்களில் ஏற்பட்டாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வேலைக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செலவுகளை கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் உதிக்கின்றார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி எப்போதும் இருக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். அதிகம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்