தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  முரட்டுத்தனமாக நுழையும் செவ்வாய்.. எத்தனை ஆண்டு கனவு.. மேஷத்தில் கொட்டும் யோகத்தில் குளிக்கும் ராசிகள்

முரட்டுத்தனமாக நுழையும் செவ்வாய்.. எத்தனை ஆண்டு கனவு.. மேஷத்தில் கொட்டும் யோகத்தில் குளிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 18, 2024 11:25 AM IST

Royal life: ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது ராசியான மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் 3 ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர்.

முரட்டுத்தனமாக நுழையும் செவ்வாய்.. எத்தனை ஆண்டு கனவு.. மேஷத்தில் கொட்டும் யோகத்தில் குளிக்கும் ராசிகள்
முரட்டுத்தனமாக நுழையும் செவ்வாய்.. எத்தனை ஆண்டு கனவு.. மேஷத்தில் கொட்டும் யோகத்தில் குளிக்கும் ராசிகள்

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி என்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார்.

ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது ராசியான மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அவர்களுக்கு அதிர்ஷ்டம், நிதி, நிலைமை, யோகம் உள்ளிட்டவைகள் அனைத்தும் முன்னேற்றத்தில் இருக்கும். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்க கூடும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். சவாலான வேலைகளையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். ஜூன் மாதம் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க போகின்றது. சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களை தேடி வரும். கணவன் மனைவி கடைக்கு அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel