Lord Saturn: சனி கும்ப ராசியில் சம்பவம்.. மார்ச் மாதத்தில் மாற்றம்.. கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்
Lord Saturn: சனி பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும். இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
நவகிரகங்களில் சனி பகவான் நீதிமானாக விளங்கி வருகின்றார். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப எப்போதும் பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.
சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும். இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளும் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிகப்படியான செலவுகளால் உங்களது மன உளைச்சல் அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
கன்னி ராசி
உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம். வீட்டில் மங்கள காரியங்கள் செய்ய நினைத்தால் அதனை சற்று தாமதமாக செய்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக நண்பர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும் .தொழில் ரீதியாக சிரமங்கள் அதிகரிக்க கூடும். மிகவும் முக்கியமாக பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவை எடுத்தாலும் ஆலோசனை செய்து எடுக்க வேண்டும்.
மீன ராசி
உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சனிபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன உளைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நடப்பதற்கு சற்று தாமதமாகும். உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9