தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உதயத்தில் கொட்டும் புதன்.. ராஜயோக வாழ்க்கை.. பணமழை கொட்டுது.. திருமண யோகம் வருகிறது..!

உதயத்தில் கொட்டும் புதன்.. ராஜயோக வாழ்க்கை.. பணமழை கொட்டுது.. திருமண யோகம் வருகிறது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 12, 2024 12:00 PM IST

புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நட்பு வட்டாரத்தால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்களுடைய பொருளாதார நிலைமை நல்ல முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் உங்களை வந்து சேருவார்கள். அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பொறுத்த அளவில் உங்களுக்கு பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுத்து வருகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும் அன்பு அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel