Rahu Mercury: ராகு புதன் சேர்க்கை.. புத்தாண்டு பண மழை இந்த ராசிகளுக்கு தான்-here we will see the three rasis that get yoga in the new year due to rahu mercury conjunction - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Mercury: ராகு புதன் சேர்க்கை.. புத்தாண்டு பண மழை இந்த ராசிகளுக்கு தான்

Rahu Mercury: ராகு புதன் சேர்க்கை.. புத்தாண்டு பண மழை இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2024 03:43 PM IST

ராகு புதன் சேர்க்கையால் புத்தாண்டில் யோகம் பெறுகின்ற மூன்று ராசிகளை இங்கே காண்போம்.

ராகு புதன் சேர்க்கை
ராகு புதன் சேர்க்கை

கல்வியின் கடவுளாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் இடம் மாறக்கூடிய இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார்.

ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவான் அவரோடு இணைந்துள்ள காரணத்தினால் தற்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் மூன்று ராசிகள் அனைத்து விதமான செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என கூறப்படுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

 

புதன் மற்றும் ராகு சேர்ந்து உங்களுக்கு நன்மைகளை கொடுக்க போகின்றனர். பண பலன்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம் ராசி

 

ராகு மற்றும் புதன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். உங்களது ஆறாவது வீட்டில் இருவரும் சேர்ந்து பயணம் செய்கின்றனர். இந்த புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அனைத்தும் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு வெற்றிகளை தரப்போகின்றது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9