ராகு தெளிவாகி விட்டார்.. செவ்வாய் சேர்ந்து விட்டார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. ஓடி விடுவது நல்லது-here we will see the signs that rahu and mars are going to give trouble - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு தெளிவாகி விட்டார்.. செவ்வாய் சேர்ந்து விட்டார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. ஓடி விடுவது நல்லது

ராகு தெளிவாகி விட்டார்.. செவ்வாய் சேர்ந்து விட்டார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. ஓடி விடுவது நல்லது

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 19, 2024 09:42 AM IST

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம்,, முயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு
ராகு

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம்,, முயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அந்த வகையில் தற்போது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி என்று செவ்வாய் பகவான் மீனராசிக்குள் நுழைகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். ராகு செவ்வாய் சேர்க்கை அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் சில ராசிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் அங்காரக யோகம் அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மிகுந்த மன அழுத்தத்தை நீங்கள் உணர நேரிடும். பேச்சுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மற்ற உறவினர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். அப்போது உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய முன்னேற்றம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சற்று மந்தமாக இருப்பார்கள்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் ஆதரவை பெற வேண்டும் என்றால் கொஞ்சம் பொறுமை தேவை. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கூட்டு தொழில் முயற்சிகள் தற்போது மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்காது. வணிக சிக்கல்கள் உங்களை தேடி வர வாய்ப்பு உள்ளது. வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு லாபம் இருக்காது.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும். குடும்ப பிரச்சனைகள் உங்களுக்கு பெரிய பாரமாக அமையும். எனவே பொறுமையாக கடந்து செல்வது நல்லது. தேவையில்லாத குற்றச்சாட்டுகளை நீங்கள் சுமக்க நேரிடும். எனவே மற்றவர்களிடம் வாய் கொடுத்து வாங்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை இப்போது தவிர்ப்பது நல்லது. முக்கியமான வேலைகளை செய்து விட்டு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய வேலைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner