தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lakshmi Luck: லட்சுமி நாராயண யோகம்.. புதனில் புகுந்த சுக்கிரன்.. பணத்தின் குளிக்கப் போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Lakshmi Luck: லட்சுமி நாராயண யோகம்.. புதனில் புகுந்த சுக்கிரன்.. பணத்தின் குளிக்கப் போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 09:28 AM IST

Lakshmi Narayana Yoga: ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் மங்கள யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் ஒரு ஆண்டிற்கு பிறகு உருவாக்கியுள்ளது.

லட்சுமி நாராயண யோகம்.. புதனில் புகுந்த சுக்கிரன்.. பணத்தின் குளிக்கப் போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
லட்சுமி நாராயண யோகம்.. புதனில் புகுந்த சுக்கிரன்.. பணத்தின் குளிக்கப் போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் மங்கள யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் ஒரு ஆண்டிற்கு பிறகு உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகுது. இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். செல்வத்தில் பெருக்கம் இருக்கும். வீட்டில் மண்டல காரியங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் சீரான பயணம் இருக்கும்.

மீன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். செல்வத்தில் உங்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel